கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் மூலம் பரவுகிறது என்பதை அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில் குரங்கு அம்மை வைரஸ், சோபாக்கள், போர்வைகள், காபி இயந்திரம், கணினி மவுஸ் மற்றும் பல வீட்டுப் பொருட்களில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானவர்களின் வீடுகளில், நோயின் அறிகுறிகள் தோன்றிய 20 நாட்களுக்குப் பிறகு படுக்கைகள், போர்வைகள், ஒரு காபி இயந்திரம், கணினி மவுஸ் மற்றும் லைட் ஸ்விட்ச்” ஆகியவற்றில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.. இருப்பினும், மேற்பரப்புகள் மற்றும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வது தொற்றின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே காய்ச்சல், உடல்வலி, குளிர், சோர்வு மற்றும் சொறி அல்லது கட்டிகள் ஆகியவை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவான அறிகுறிகளாக உள்ளன. கட்டிப்பிடித்தல், மற்றும் முத்தமிடுதல், படுக்கை, துண்டுகள் மற்றும் ஆடைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட பல காரணங்களால் குரங்கு அம்மை பரவுகிறது.. எனினும் இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.