காலிஸ்தான்(Khalistan) பிரிவினைவாதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் கனடா அரசுகளுக்கிடையே ராஜாங்க ரீதியிலான உறவுகளில் விரிசல்கள் இருந்தாலும் இந்தியா கனடா அரசியல்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக ஒட்டாவாவின் கமிஷனர் தலைமையிலான ஒரு சுதந்திரமான பொது விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
கமிஷனர் மேரி-ஜோசி ஹோக்கின் இடைக்கால அறிக்கையின் படி கனடாவைச் சேர்ந்த பினாமிகள் உட்பட இந்திய அதிகாரிகள், கனேடிய சமூகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தானி பிரிவினைவாதிகள் போன்ற பிரச்சினைகளில் ஒட்டாவாவின் நிலைப்பாட்டை புது தில்லியின் நலன்களுடன் சீரமைக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
கனடாவின் கடந்த 2019 மற்றும் 2021ல் நடந்த இரண்டு கூட்டாட்சித் தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், கருத்துக் கணிப்பு முடிவுகள் பாதிக்கப்படவில்லை என்றும் தேர்தல் முறை வலுவாக இறந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
194 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 இடங்களில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் மீதான இந்தியாவின் ஆர்வம் அந்த நாட்டில் வசிக்கும் அதிகப்படியான தெற்காசிய சமூகத்துடன் தொடர்புடையது. இந்தச் சமூகங்களின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு எதிரான உணர்வை வளர்ப்பதற்கு பயன்படுத்துவதாக இந்தியா கருதுகிறது. மேலும் இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கிறது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
காலிஸ்தான்(Khalistan) பிரிவினைவாதத்துடன் இணைந்த எவரையும் நாட்டிற்கு “தேசத்துரோக அச்சுறுத்தலாக” இந்தியா பார்க்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டு கூறுகிறது. சட்டப்படியான காலிஸ்தான் சார்பு அரசியல் மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றை இந்தியா வேறுபடுத்தி பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய வெளிநாட்டு தலையீட்டின் இலக்குகள் பெரும்பாலும் இந்திய- கனடா சமூகங்களின் உறுப்பினர்களாக இருப்பதாகவும் கனடா நாட்டின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. “ஆனால், இந்தோ-கனடியர்கள் அல்லாத முக்கிய இந்தியர்களும் இந்தியாவின் வெளிநாட்டு செல்வாக்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளனர்” என்று அது கூறியது.
இந்த நடவடிக்கைகள் கனடாவின் ஜனநாயக நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் இவை முக்கியமானவை என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் கனடா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட பினாமிகளின் நெட்வொர்க்குகளில் தொடர்பை ஏற்படுத்தி கனடாவில் வெளிநாட்டு தலையீட்டை நடத்துவதற்கு அதிக அளவில் நம்பி இருக்கின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்தியாவிற்கும் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகளுக்கும் இடையிலான வெளிப்படையான தொடர்பைத் தெளிவுபடுத்துகிறது. ப்ராக்ஸிகள் இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வேலை செய்கிறார்கள், அவர்களிடமிருந்து வெளிப்படையான மற்றும் மறைமுகமான வழிகாட்டுதல்களைப் பெறுகிறார்கள்,” என்று அது கூறியது.
2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களில் இந்திய ப்ராக்ஸி முகவர்கள் தலையிட முயற்சித்திருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
இந்திய சார்பு வேட்பாளர்களின் தேர்தலைப் பாதுகாக்க அல்லது செல்வாக்கைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக, பல்வேறு கனடா அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோத நிதி உதவியை இரகசியமாக வழங்குவது உட்பட, கன்னடா தேர்தலில் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் இந்தியப் பிரதிநிதிகள் தலையிட முயற்சித்திருக்கலாம் என்று புலனாய்வு அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
சில சமயங்களில், வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களுக்கு முறைகேடான நிதியைப் பெற்றதே தெரியாது. 2021 பொதுத் தேர்தலில் இந்திய அடிப்படையிலான தவறான பிரச்சாரங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.