காதலர் தினத்தன்று காண்டம், மெழுகுவர்த்திகளின் விற்பனை அதிகரித்ததாக Blinkit நிறுவனர் தெரிவித்துளார்.
பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தான் காதலர் தினம் என்று ஒரு நாள் மட்டுமில்லாமல் ஒரு வாரம் முழுவதும் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. ரோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, முத்த தினம் என பிப்ரவரி 7 முதலே இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.. அந்த நேற்று முன் தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது..

இந்நிலையில் இந்த காதலர் தினத்தில் ஆணுறைகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகிய இரண்டின் விற்பனை அதிகரித்ததாக பிளிங்கிட் (Blinkit) நிறுவனம் தெரிவித்துள்ளது.. பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிங்கிட் இந்த ஆண்களுக்கான டியோடரண்டுகள், பெண்களுக்கான வாசனை திரவியங்கள், சிங்கிள் ரோஸ், பூங்கொத்துகள் மற்றும் சாக்லேட்டுகள் ஆகியவை வழக்கத்தை விட அதிக அளவிலான விற்பனையை கண்டதாக தெரிவித்துள்ளது..
பிளிங்கிட் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் ” காதலர் தினத்தில் காண்டம், மெழுகுவர்த்திகளின் விற்பனை கணிசமாக அதிகரித்தது.. ஒரு வாரத்தில் வழக்கமாக இருந்த விற்பனையை விட, காதலர் தினத்தில் மட்டும் அதிகமான சாக்லேட்டுகளை விற்றது. காதலர் தினத்தன்று காலை 10 மணிக்குள், 10,000க்கும் மேற்பட்ட ரோஜாக்கள் மற்றும் 1,200 பூங்கொத்துகளை விற்கப்பட்டது..” என்று குறிப்பிட்டுள்ளார்..