fbpx

”சாதிவாரியான கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்”.!! பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த வேண்டுமென்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்ட முடியும். மேலும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

ஜெயிச்சது புத்தியா..? சக்தியா..? ஆண்டவர் கொடுக்கப்போகும் தீர்ப்பு..!! பரபரப்பு வீடியோ..!!

Sat Oct 21 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, […]

You May Like