fbpx

மாநாடு தேதியை விஜய் கன்பார்ம் பண்ணிட்டாராமே..!! பரபரக்கும் அரசியல் களம்..!! வெளியாகும் அறிவிப்பு..!!

அக்டோபர் 15ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என்ற சுவர் விளம்பரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பி அலுவலகம் மற்றும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பிய விக்கிரவாண்டி போலீசார், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறியிருந்தனர்.

இந்நிலையில், கடிதத்திற்கு கடந்த 6ஆம் தேதி புஸ்ஸி ஆனந்த், எழுத்துப்பூர்வமாக விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்ய நாட்கள் குறைவாக இருப்பதால் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு நாளில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் மாநாடு நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தவெக மாநாடு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என சாலையோரங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Read More : உங்கள் சமையலறையில் இந்த பொருட்கள் வெச்சிருக்காதீங்க..!! உடனே தூக்கிப் போடுங்க..!!

English Summary

There has been a stir due to the wall advertisements that the Tamil Nadu Victory Association’s conference will be held on October 15.

Chella

Next Post

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா...? அன்புமணி சரமாரி கேள்வி

Tue Sep 17 , 2024
What is happening in Tamil Nadu is democracy or sand smuggling regime

You May Like