fbpx

பேருந்து நிலையத்தில் இடம் பிடிப்பதில் மோதல் -தொழிலாளி கொலை

பேருந்து நிலையத்தில் தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேலவேந்தன் (36). தொழிலாளியான இவர் குடும்பத்தினரைப் பிரிந்து மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பேருந்து நிலையத்தில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மாதவரம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் வேலவேந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த சிவசங்கர்(46) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கூறிய காவல் துறையினர், “கொலை செய்யப்பட்ட வேலவேந்தன் வழக்கம்போல மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கச் சென்றார். தன்னுடைய இடத்தில் சிவசங்கர் படுத்து தூங்கியதைக் கண்டு கோபம் அடைந்த வேலவேந்தன், நான் தூங்கும் இடத்தில் நீ எப்படி தூங்கலாம்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் செய்துள்ளார். இதையடுத்து, சிவசங்கர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் வேலவேந்தன் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சிவசங்கர், சிமென்ட் சிலாப்பை வேலவேந்தன் தலையில் போட்டுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த வேலவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்’’ எனத் தெரிவித்தனர். தூங்கும் இடத்திற்காக தொழிலாளியின் தலையில் சிமெண்ட் சிலாப்பை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

’மக்களின் ஆசையை தூண்டி ஆட்சிக்கு வந்த மோடி’..!! ’புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி’..!! போட்டுத் தாக்கிய முதல்வர்..!!

Thu Apr 4 , 2024
மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் […]

You May Like