fbpx

திமுகவை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவரும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தினர். இதில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஆட்சியர் ஶ்ரீதர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய குளச்சல் எம்.எல்.ஏ., “நான்கு வழிச்சாலை பிரச்சனை என்பது தீயைப் பற்ற வைத்திருப்பது போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களின் அதிகாரம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு என்பது பாரபட்சம் பார்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்திலும் இதே நிலைதான் இருந்தது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு கொண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த அரசு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. சட்டப்பேரவைத்தொடரில் இந்த பிரச்சனைக்காக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போகிறேன்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

உயிருக்கே ஆபத்தாக மாறும் கோபி மஞ்சூரியன்..!! தடை விதித்த கோவா..!! என்ன காரணம்..?

Tue Feb 6 , 2024
சைவ பிரியர்களின் விருப்ப உணவான கோபி மஞ்சூரியன் கோவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விருப்ப உணவுகள் இருக்கும். ஒரு மாநிலத்தில் கிடைக்கும் உணவுகள் வேறு மாநிலத்தில் கிடைக்காது. அப்படி இருந்தாலும் சுவையில் மாறுபடும். அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் எந்த அளவு பிடிக்குமோ, சைவ பிரியர்களுக்கு அதே அளவு கோபி மஞ்சூரியன் உணவு பிடிக்கும். காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோபி மஞ்சூரியன் […]

You May Like