fbpx

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 5-வது நாள் நடைபயணம் … கேரளாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வரவேற்பு …

கேரளாவில் 5-வது நாள் யாத்திரையை கனியபுரம் என்ற பகுதியில் இருந்து ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி சுமார் 25 கி.மீட்டர் தூரத்தில் நிறைவு செய்தார்.

கேரளா வந்த ராகுல்காந்தியை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நடைபயணத்தால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் கூட நடைபயணம் தடைபடாமல் நாட்டை ஒருங்கிணைக்கும் இந்த பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். நடைபயணத்தின்போது மழை வந்தது. மழையைக் கூட பொருட்படத்தாமல் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் நடந்து சென்றனர். பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.  

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வரும் நடைபயணம் இதுவரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்துள்ளார். இன்றைய நடைபயணத்தின்போது அவர் கூறுகையில் ’’ இந்த நடைபயணம் எதற்காக என கேள்விகேட்கின்றனர். இந்தியாவிற்கு பல முக்கியமான இலக்குகள் உள்ளன. லட்சக்கணக்கான ஏழைகளின் துன்பத்தை குறைக்க வேண்டும். அவை எளிமையானது கிடையாது. இந்தியா , மதம் , மொழி , இனம் என பிளவு பட்டு ஒருவர் மீது ஒருவர் வெறுப்புடன் இருக்கின்றோம். அவர்களை ஒற்றுமைப் படுத்தவே இந்த யாத்திரை ’’ . என்றார்.

வெறுப்பு வன்முறை மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் , விலைவாசி உயர்வு போன்றவற்றை தீர்க்கமுடியாது. மக்களிடம் சென்று மக்களின் பிரச்சனைகளுக்கு செவி சாய்ப்பதே இந்த பாதயாத்திரையின் நோக்கம் . இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக் அனைவரது கருத்துக்களையும் நாம் கேட்க வேண்டும். இந்த யாத்திரை மூலமாக அதைத்தான் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கின்றேன் எனவும் ராகுல்காந்தி கூறினார்..

மொத்தம் 3,500 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் எம்.பி. ராகுல்காந்தி . 12 மாநிலங்கள் வழியாக அவர் டெல்லியில் இந்த யாத்திரையை முடிக்க உள்ளார். ஒவ்வொரு நாளும் 25 கி.மீ. நடைபயணம் மேற்கொள்கின்றார். வருகின்ற 30ம் தேதி ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

Next Post

அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் வெளியீடு … புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தும் மலிவு விலையில் கிடைக்கும்….

Tue Sep 13 , 2022
மத்திய அரசு வெளியிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் , தடுப்பூசிகள் உள்பட 384 மருந்துகளை மலிவு விலையில் இனி பெறலாம்….. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புதியதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 26 மருந்துப் பொருட்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக  மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் , ஆன்டசிட் சால்ட் ரானிடிடின் என்ற மருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக […]

You May Like