fbpx

ரூ.1,700 கோடி செலுத்துமாறு காங்கிரசுக்கு நெருக்கடி… தேர்தல் நேரத்தில் I.T. நோட்டீஸ் !

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததால், பிப்ரவரி மாத மத்தியில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வங்கிக் கணக்குகள் முடங்கியதால், காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான விமான டிக்கெட்டுகள் புக் செய்வது தொடங்கித் தேர்தலுக்கான விளம்பரங்கள், பரப்புரை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எனக் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆளுங்கட்சியுடன் போட்டியிட்டுத் தேர்தல் பிரசாரம் செய்ய இயலவில்லை என்றும் தேர்தலில் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.

ஆனாலும் இதுவரை காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறது.

அதில், 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான அபராதம், அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து ரூ.1,700 கோடி செலுத்தும்படி நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளிக்கப்படாதவாறு தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், வருமான வரித்துறையின் தொடர் நடவடிக்கைகள் எதிர்க் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Pressure on Congress to pay Rs.1,700 crore

Rupa

Next Post

’என்கிட்ட பவுடர் தான் இருக்கு பூசிக்கிறீங்களா’..? சோதனை செய்த அதிகாரிகளிடம் கிண்டல் செய்த மன்சூர் அலிகான்..!!

Fri Mar 29 , 2024
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானின் காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இவர், பிரச்சாரம் மேற்கொள்ளும் நேரத்தில் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இந்நிலையில், நேற்று குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த […]

You May Like