fbpx

ஆட்சியமைக்க முயலும் காங்கிரஸ்!! நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் இன்று பேச்சுவார்த்தை

பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை அழைத்து பேசுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் ஆனது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 289 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானாலும். அவை அனைத்து பொய்யாக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவர்கள் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவைதான் நம்பியிருக்கிறார்கள். இந்த நிலையில்,

இந்நிலையில் பாஜகவின் தோல்வி குறித்தும் காங்கிரசின் வெற்றி குறித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல்,” அரசியல் சாசனத்தை காக்க இந்த தேர்தலை நாங்கள் பார்த்தோம். அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தை காக்க உதவி இருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஊழல் கூட்டணி வைத்திருந்தவர்களுக்கு இந்த தேர்தல் தக்க பாடம் புகட்டி இருக்கிறது இந்தியா கூட்டணி தனித்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மக்களின் உரிமைகளை காக்க போராடும் வகையில் வெற்றி பெற்றிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, அதற்கான முடிவு இன்று எடுக்கப்படும். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை இன்று நடைபெற இருக்கும் நிலையில் அதற்குப் பிறகு இது குறித்து அறிவிக்கப்படும். மேலும் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என கேட்கிறார்கள். அது குறித்து இன்று முடிவு செய்யப்படும். ரேபெரலி வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையை காப்பாற்றுவேன். அதே நேரத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அது எந்த தொகுதி என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Read More: அமோக வெற்றி..!! ஜூன் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..?

Baskar

Next Post

"இப்படி எந்த கட்சியும் வென்றதில்லை" - வாடிய முகத்துடன் பேசிய பிரதமர் மோடி!!

Wed Jun 5 , 2024
பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியை தான் அமைக்க முடியும் சூழலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு […]

You May Like