fbpx

காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரபல நடிகர்…? கர்நாடக அரசியலில் பரபரப்பு..

நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உள்ளன.. இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை சந்தித்துள்ளார்..

பெங்களூருவில் உள்ள சுதீப்பின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் சுதீப் அரசியலில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.. எனினும் சுதீப் உடனான சந்திப்பின் போது அரசியல் அறிமுகம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை..

இதுகுறித்து சுதீப் தரப்போ அல்லது கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டி.கே.சிவகுமாரோ எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது… காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சுதீப்பை நட்சத்திர பேச்சாளராக ஈடுபடுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேசவே சிவக்குமார் சுதீப்பை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது..

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கிச்சா சுதீப் இருக்கிறார்.. கடந்த ஆண்டு இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிவிட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்ததால், தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

“ இதை எல்லாம் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது..” குற்றவாளியை விடுவித்த உச்சநீதிமன்றம்..

Sat Feb 4 , 2023
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. இந்த தீர்ப்பை எதிர்த்து நைம் அகமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
’ஒவ்வொரு துறை செயலாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை ஏற்படும்’..! நீதிபதிகள் எச்சரிக்கை

You May Like