ரஷ்ய அதிபர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், அதிலிருந்து அவர் தப்பி பிழைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
யூரோ வீக்லி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. எவ்வாறாயினும், இந்த முயற்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.. புடினின் காரின் முன் சக்கரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், புகை வெளியேறியதால், அதிபரின் கார், அதிவிரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்நிறுவனம் செய்தி வெளியிட்டது.. இந்த படுகொலை முயற்சி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளாடிமிர் புடின் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே உஸ்பெகிஸ்தானில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை விளாடிமிர் புடின் இன்று சந்திக்க உள்ளார், அங்கு இரு தலைவர்களும் பிராந்திய பாதுகாப்புக் குழுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்..
புடினை கொல்வதற்கான முயற்சி நடைபெறுவது இது முதன்முறையல்ல.. 5 படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக புடின் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..