fbpx

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இதற்கான, பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கியது. தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இன்று காலை 10 மணி முதல் 18ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 17 வரை இட ஒதுக்கீடு செயல்முறை நடைபெறும். இரண்டாவது சுற்றுக்கான இட ஒதுக்கீடு முடிவு ஆகஸ்ட் 18ம் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நீட் தேர்வு எழுதிய சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கோவை அருகே திமுக கவுன்சிலர் வெட்டப்பட்ட விவகாரம்….! ஐந்து பேர் அதிரடி கைது….!

Mon Aug 14 , 2023
கோவை அருகே திமுகவைச் சார்ந்த பெண் கவுன்சிலர் வீட்டிற்குள்ப்புகுந்து, கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவர், மகன் என்று மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி சென்ற கும்பலை தற்போது காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2வது தெருவை சேர்ந்த திமுக கவுன்சிலர் சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார் மற்றும் அவர்களுடைய மகன் மோகன் உள்ளிட்டோர் இரவு வீட்டில் […]

You May Like