fbpx

வரும் 25, 26ஆம் தேதிகளில் கலந்தாய்வு..!! ரெடியா இருங்க..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு வரும் 25, 26ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு, அதாவது குரூப் 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 இளநிலை உதவியாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில், பலருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு வரும் 25, 26ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு 673 இளநிலை உதவியாளர் பட்டியல் கடிதத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.

பணி நாடுநர்களுக்குக் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கலந்தாய்வு நடைபெறவுள்ளதால், பணிநாடுநர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் பணிநாடுநர்களின் பெயர் விவரப் பட்டியல் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் 27.09.2023 அன்று பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால், அதுவரை வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Breaking | தீபாவளி பண்டிகை..!! 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Sep 22 , 2023
நாடு முழுவதும் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சரவெடிக்கான தடை தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே […]

You May Like