fbpx

சேஸிங் செய்து பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரி..!! துப்பாக்கியுடன் கொள்ளை கும்பல்..!! என்கவுண்டர் செய்த போலீஸ்..!!

நாமக்கல் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றை காவல்துறையினர் விரட்டிப் பிடித்த நிலையில், வடமாநிலத்தவர் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று பைக் மற்றும் வாகனங்களை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சில கிலோ மீட்டர் தூரம் லாரியை சேஸிங் செய்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து, லாரி கண்டெய்னரை திறந்து பார்த்த போது, கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் ஒன்று இருந்துள்ளது.

கண்டெய்னரை திறக்க முயன்ற போது உள்ளே துப்பாக்கியுடன் இருந்த கொள்ளையர்கள் காவல் ஆய்வாளரை தாக்க முயன்றனர். அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் கேரள மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கண்டெய்னரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 66 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 200-க்கு மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More : சினிமாவில் இருந்து காணாமல்போன விஜய்யின் ரீல் தங்கை..!! இப்பொழுது என்ன செய்கிறார்..?

English Summary

In Namakkal district, a container lorry was chased away by the police, and a man from North State was shot dead in an encounter.

Chella

Next Post

World Heart Day 2024 : உங்கள் இதயத்தை தினமும் கவனிக்கிறீர்களா..? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

Fri Sep 27 , 2024
Maintaining heart health is crucial for your overall well-being. In this fast-paced world, people are burdened with stress and hectic lifestyles that can hurt their heart health.

You May Like