நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த மனுவானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் மற்றும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில் அனைத்து துறை செயலாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மேல்முறையீடு செய்யக்கூடிய வழக்குகளில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் இல்லையெனில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுகொண்ட நீதிபதி தலைமை செயலாளரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்களித்துள்ளார்.