fbpx

தொடரும் கனமழை..!! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை..?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழையால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். இதனால் பல பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Chella

Next Post

மனைவியை அழைத்து வர சென்ற மருமகன், எதிர்ப்பு தெரிவித்த மாமியார்.! ஓட ஓட விரட்டி கொலை.!

Thu Nov 23 , 2023
சிவகங்கை மாவட்டத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவியை வீட்டிற்கு அழைத்து வர எதிர்ப்பு தெரிவித்த மாமியாரை குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் மகாதேவி தம்பதியரின் மூன்றாவது மகளான ஆர்த்தியை மணப்பாறையைச் சேர்ந்த பிரபு என்ற 28 வயது இளைஞனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு […]

You May Like