தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், நாளையும் சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.