fbpx

தொடரும் கனமழை..!! தீவிரமடையும் டெங்கு..!! ஒரே நாளில் இத்தனை பேரா..? மக்களே உஷார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், புதுகோட்டை மாவட்டத்தில் 202 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும், இன்று வரை 214 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று ஒரே நாளில் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி இரண்டு முதல் மூன்று நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் 100-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஃபீவர் வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை
அளித்து வரப்படுவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

அரசுப் பணிகளில் துரோகம் இழைக்கப்படும் SC மற்றும் ST பிரிவினர்.! களத்தில் குதிக்கும் காங்கிரஸ்.!

Thu Nov 30 , 2023
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் எஸ்சி அணியினரின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அந்த அணியின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு […]

You May Like