fbpx

தொடரும் ரெட் அலர்ட்..!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதி கனமழை பெய்து வருகிறது.

இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கனமழை, தென்மாவட்டங்களில் நாளை வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Chella

Next Post

போதை ஊசிக்கு அடிமை..!! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..!! பிரிந்த இன்ஸ்டா ஜோடி..!! வீடியோவில் ஷாக்கிங் தகவல்..!!

Mon Dec 18 , 2023
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த காதல் ஜோடிகளான தேசராணி – ஹரி ஜோடி பிரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் டோரா புஜ்ஜி என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் ஜோடி தான் தேசராணி – ஹரி ஜோடி. இவர்கள் இரண்டு பேருமே பெண்கள்தான். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள், காதலில் விழுந்து […]

You May Like