ஆப்கானிஸ்தானில் இன்று காலை, 5.2 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ கீழே மற்றும் அட்சரேகை 36.33 மற்றும் தீர்க்கரேகை 70.70 இல் உருவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவம் இல்லை.
கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலத்த நிலநடுக்கங்களால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், 6 கிராமங்கள் அழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதை தொடர்ந்து அச்சம் அதிகரித்துள்ளது.