fbpx

தொடரும் சோகம்! பெற்றோரின் அலட்சியத்தால் தெருநாய் கடிக்கு பலியான 8 வயது சிறுமி!

பெற்றோரின் அலட்சியத்தால் தெருநாய் கடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்ற போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. சிறு காயம் ஏற்பட்டதும், சிறுகாயத்திற்கு மருந்து தேவையில்லை என நினைத்து அலட்சியமாக பெற்றோர் இருந்துள்ளனர்.

இதையடுத்து நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால் பாஹ் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்த மருத்துவர்கள் ஆக்ராவின் எஸ்என் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை, “என் குழந்தைக்கு நாய் கடித்ததில் சிறு காயம் ஏற்பட்டது. சில நாட்களில் சரியாகிவிடும் என நினைத்தேன். இதேபோன்ற ஒரு சம்பவம் எனது அருகில் உள்ள மற்றொரு குழந்தைக்கு நடந்தது, சிறுவன் நன்றாக இருக்கிறான். ஆனால் எனது குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவளுக்கு அதிக காய்ச்சலால் பேச முடியவில்லை” என கண்ணீர் மல்கக் கூறினார்.

மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து “தெரு நாய்களால் காயம் ஏற்பட்ட குழந்தை 15 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாயால் தாக்கப்பட்ட உடனேயே குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போடப்படவில்லை. நாய், பூனை மற்றும் குரங்கு கடித்தால், உடனடியாக ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.” என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்துவரும் தெருநாய்க்கடி உயிரிழப்புகளை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

களைகட்டும் தேர்தல்..! சிலிண்டர் ரூ.500..! மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 ஆண்டுக்கு வழங்கப்படும்..!

Thu Oct 26 , 2023
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் அசோக் […]

You May Like