fbpx

அண்ணாமலைக்கு தொடர் சிக்கல்!… தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இந்துகளின் பண்டிகையான தீபாவளியை ஒழிக்க வெளிநாட்டு நிதி உதவி பெறும் கிறஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை தடை செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைக் கண்டித்து வி.பியூஷ் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனுவில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலைக்கு நிவாரணம் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடந்த கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தனர். இநிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படுவதாக அறிவித்தனர். மேலும், எதிர் மனுதாரர் தரப்பில் அவதூறு பேச்சு குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மனுதாரர் வி.பியூஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்சிங், மனுதாரர் கால அவகாசம் கோருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வரும் செப்டம்பர் 9ஆம் தேதிக்கு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் அறிக்கை சமர்பிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Readmore: கணவர் இல்லாத நேரம்… அண்ணியிடம் மைத்துனர்..! வீடியோவை காண்பித்து…! அரங்கேறிய கொடூரம்..

Kokila

Next Post

எலான் மஸ்க் மோடியை சந்திக்காமல், சீன பிரதமருடன் சந்திப்பு - சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம்

Tue Apr 30 , 2024
இந்திய பயணத்தை ஒத்திவைத்து எலான் மஸ்க் சீனாவுக்குச் சென்றது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்பியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் முதலீடு உள்ளிட்ட அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த […]

You May Like