fbpx

தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.

தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 2,209 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்துள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. சிலர் பாய்ந்தோடும் தண்ணீர் முன் செல்ஃபி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்புவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

அக்.20இல் காற்றழுத்த தாழ்வு பகுதி..!! உருவாகும் புயல்..!! பாதிப்பு எப்படி இருக்கும்..??

Mon Oct 17 , 2022
அக்.18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், […]

You May Like