கனமழை காரணமாக கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இராணி தாலுக்காவில் உள்ள குரும்பன்மொழி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 250 ஆதிவாசி குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால், பம்பை நதி, கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொடர் கனமழையால் கண்ணூர், திருசூர், கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்திலும் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த மாவட்டத்தில் உள்ள பெருந்தேனருவி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.