fbpx

தொடர் கனமழை..!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

கனமழை காரணமாக திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதியில் நிலவியது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்னாசி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பதறிய காவல்துறை..!! நடந்தது என்ன..?

Fri Nov 10 , 2023
கேரளா மாநில தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்கள் அவசர காலங்களின் போது போலீஸாரை தொடர்பு கொள்ள 112 என்ற அவசரகால சேவை திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் எவ்விதமான அவசர சேவையாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உரிய துறைக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு சேவைகள் உடனடியாக வழங்கப்படும். இந்நிலையில், நேற்று […]

You May Like