குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் அளவுக்கு அதிகமான தண்ணீர்கொட்டி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக அதிகமான தண்ணீர் மலைப் பகுதியில் உள்ள இலை தழைகள், கற்கள் உள்ளிட்டவர்களை இழுத்துக் கொண்டு அருவிகளில் கொட்டி வரும் நீருடன் சேர்த்து வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவிகளில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.