fbpx

தொடர் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு..!! 55 பேர் உயிரிழந்த சோகம்..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!! எங்கு தெரியுமா..?

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகளும், சாலைகளும் சேதமாகின. கடந்த 13ஆம் தேதி சோலன் மாவட்டத்தில் ஜடோன் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீரென கனமழை பெய்தது. இதனால், அங்கு வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதேபோல், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 15) கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல், சிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 7 வீடுகள் இடிந்து சேதமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு, பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் மேக வெடிப்பு, கனமழை, நிலச்சரிவால் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் கனமழை, வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 400 சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தரவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chella

Next Post

மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறீர்களா..? அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க..!! நல்ல லாபம் ஈட்டலாம்..!!

Wed Aug 16 , 2023
ராஜஸ்தானில் ஒருவர் பசுவின் சாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். அவர் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சுதர்சன்புரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பீம் ராஜ். இவர் அதே பகுதியில் பல வருடங்களாக அச்சகம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். ஆனால், இதில் அந்தளவுக்கு லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், […]

You May Like