fbpx

தொடர் விடுமுறை..!! உள்ளூர் விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு..!! பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் விமான விலை கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதுவும் இந்த வார இறுதியுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை தொடங்குவதால் சென்னையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பலரும் வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், விமான கட்டணங்கள் 3 முதல் 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், பொதுவாக திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.6,000 தொடங்கி ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,000 வரை கட்டணம் இருக்கும். ஆனால், தற்போது ரூ.6,700 தொடங்கி ரூ.17,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கான விமான கட்டணம் ரூ.3,000இல் இருந்து ரூ.14,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்ல ரூ.2,200ஆக கட்டணம் தற்போது ரூ.11,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

தை பொங்கல்: "எனக்காக இதை செய்யுங்க" மக்களுக்கு முதல்வரின் அன்பு வேண்டுகோள்.!

Sat Jan 13 , 2024
பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையானது ஜாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாட கூடிய சமத்துவ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பண்டிகை என்பதை தாண்டி விவசாயம் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு […]

You May Like