fbpx

தொடர் விடுமுறை..!! சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..!! 2 நாளில் 3.12 லட்சம் பேர் பயணம்..!!

கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்

காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விடுமுறை தொடங்கிவிட்டதால், நேற்று முன்தினம் மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை..!! சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..!! 2 நாளில் 3.12 லட்சம் பேர் பயணம்..!!

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 5,679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், பண்டிகை காலம் முடிந்து வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

’ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழிக்க முடியாது’..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேட்டி..!!

Sun Oct 2 , 2022
‘தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவை அமல்படுத்தியவர். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் மிக பெரிய […]
’ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழிக்க முடியாது’..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேட்டி..!!

You May Like