fbpx

மீண்டும் இதற்கெல்லாம் கட்டுப்பாடு..? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. இதனால், இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த ஆலோசனையில் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டுப்பாடு, முகக்கவசம் அணிவது மற்றும் அபராதம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று மாலையே அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

ரேஷன் அட்டைகளில் வருகிறது புதிய மாற்றம்..!! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Sun Mar 26 , 2023
நாட்டில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19.79 கோடி ரேஷன் அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மையமாகப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தது போல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் வெளிப்படை தன்மையுடன் கூடிய இணைய […]

You May Like