பதான் படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தி படம், ‘பதான்’. இதில் இடம்பெறும் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும்டூயட் பாடியுள்ளனர். நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்ட இந்தப்பாடலின் வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது. சில நாட்களில் பல மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கியது.
ஆனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பதான் படத்திற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், கொல்கத்தா பட விழாவில் பேசிய ஷாருக்கான் ,சமூக வலைதளங்கள் பல நேரங்களில் பிற்போக்கு பார்வையோடு இயக்கப்படுகின்றன. சுற்றி என்ன நடந்தாலும் என்னைப் போன்றவர்கள் நேர்மறையாகவே இருப்பார்கள். எதிர்மறை கருத்துகள் என்னைப் பாதிக்காது என்று தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘பதான்’ படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பதான் படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூபாய் 100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஷாருக் – தீபிகா படுகோன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.