fbpx

சர்ச்சையில் சிக்கிய KFC..! பர்கரில் கையுறை..! பதறிப்போன வாடிக்கையாளர்..! வைரலாகும் வீடியோ

பிரபல கேஎஃப்சி உணவகத்தில் பர்கரில் கையுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக் கடையான KFC சிக்கன் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பர்கரை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு பிளாஸ்டிக் பொருள் தென்பட்டுள்ளது. உடனடியாக பர்கரை பிரித்து பார்த்த போது அதில் கையுறை இருந்தது தெரியவந்தது. இதை கண்டதும் டேவிட் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சர்ச்சையில் சிக்கிய KFC..! பர்கரில் கையுறை..! பதறிப்போன வாடிக்கையாளர்..! வைரலாகும் வீடியோ

பர்கரில் கையுறை இருந்ததை உடனடியாக உணவகத்தின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு டேவிட் வேண்டாம் என தெரிவித்ததோடு, கையுறை இருந்ததை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று ஆரணி பகுதியில் பீட்ரூட்டில் எலி தலை இருந்தது தொடர்பாக செய்தி வெளியானது. தற்போது பர்கரில் கையுறை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தெரியாத எண்ணில் இருந்து நிர்வாண வீடியோ கால் வருகிறதா..? அப்ப ஜாக்கிரதையாக இருங்க..

Tue Sep 13 , 2022
இந்த நவீன காலக்கட்டத்தில் இணைய மோசடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் வீடியோ அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. இந்த ஆண்டின் தொடக்க அறிக்கைகளின்படி, பலர் சீரற்ற எண்களிலிருந்து வீடியோ அழைப்புகளைப் பெற்றனர்.. இந்த வீடியோ கால் மூலம் மக்களை ஏமாற்றி, ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த […]

You May Like