fbpx

சுசி லீக்ஸ் முதல் விஜய் வரை.. நடிகை த்ரிஷா சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை..! ஹைலைட் இந்த மேட்டர்தான்..

தற்போதுள்ள தமிழ் திரையுலக நடிகைகளுள் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. தமிழ் மொழியில் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். 41 வயதாகும் த்ரிஷா, இன்றளவும் கதாநாயகியாகத்தான் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகையாக, த்ரிஷா தடுக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.  அதே நேரத்தில் த்ரிஷா சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். த்ரிஷாவின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சர்ச்சைகள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். 

சுசி லீக்ஸ் : கோலிவுட்டை உலுக்கிய சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷ்-த்ரிஷா படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பாடகி சுசித்ரா தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை தெரிவித்துள்ளார். கசிவுகளுக்குப் பின்னால் தான் இல்லை என்றார்.

சுசி லீக்ஸில், ராணா-த்ரிஷாவின் அந்தரங்க புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ராணா அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ராணா திருமணம் ஆனபோது… அவரை மறைமுகமாக குறிவைத்து சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்குரிய கருத்துக்களை த்ரிஷா வெளியிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு : PETA தென்னிந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக திரிஷா உள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது தாக்குதல் முயற்சியும் நடைபெற்றது. அதன்பின்னர் த்ரிஷா பின்வாங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். 

தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் : வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமணத்தை த்ரிஷா எதிர்பாராதவிதமாக ரத்து செய்தார். இதற்கான காரணங்கள் தெரியவில்லை. த்ரிஷாவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு : லியோ படத்தில் த்ரிஷாவுடன் பலாத்கார காட்சி இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து சர்ச்சையானது.

ஏ.வி.ராஜுவின் அவதூறு கருத்து : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது. “கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலைபேசி ஆட்சிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார். மேலும், இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்குக் கண்டனம் எழுந்தது. திரையுலகில் இருந்து சேரன், விஷால் , நடிகர் சங்கம், பெப்சி சங்கம் உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. சமூக வலைத்தளா பக்கங்களில் ரசிகர்கள் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

விஜய் த்ரிஷா சர்ச்சை : நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, ஒன்றாக லியோ படத்தில் நடித்தனர். இந்த படத்தில் இருவருக்கும் இடையிலான முத்தக்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது ரசிகர்கள் மத்தியில் நெருடல்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய்யும் த்ரிஷாவும் அவர் நடித்த கோட் படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடினர். யாருக்காகவும் ஐடம் டான்ஸ் ஆட மாட்டேன் எனக்கூறிய த்ரிஷா, முதன்முறையாக விஜய்க்கான நடனமாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே போல விஜய் சங்கீதாவுடன் இல்லை என்றும், த்ரிஷாவுடன் அவ்வப்போது வெக்கேஷன் செல்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி,  இந்த ஆண்டில் சர்ச்சைகளினால் வைரலான நாயகியாக இருக்கிறார் த்ரிஷா. 

Read more ; பாம்புடன் வித்தை காட்டிய டிடிஎஃப்..!! வீட்டிற்கு பறந்து வந்த வனத்துறை..!! வீடியோ வைரலானதால் அதிரடி சோதனை..!!

English Summary

Controversies that rocked the life of star lady Trisha! Truths unknown to this generation!

Next Post

சற்றுமுன்.. பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி..!! நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்..

Fri Jan 3 , 2025
Three-and-a-half-year-old child Lakshmi died after falling into the waste water tank of the school in Vikravandi, Villupuram district.

You May Like