fbpx

’’தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்க கூடாது’’ அலிஷா அப்துல்லா பேச்சால் சர்ச்சை …

தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கின்றது என்று பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

திரைப்பட நடிகையான அலிஷா அப்துல்லா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என கூறி வரும் நிலையில் அலிஷா அப்துல்ல தமிழகத்தில் தமிழை திணிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் தெலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ’’தமிழக அரசு தமிழ்நாட்டில் தமிழை திணிக்கின்றது. நான் சிறியவயதில் இருக்கும் போது தமிழ் முக்கியமான மொழியாக இருந்தது. ஆனால், தமிழை திணிக்கின்றது. நான் தமிழில் 3 முறை பெயில் ஆகிவிட்டேன். இந்தி, பிரெஞ்ச் மொழிகளை படிக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் தமிழும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் விடைத்தாளில் அவர்களே விடை எழுதி தேர்ச்சி பெற வைத்தார்கள். நாங்கள் எந்த மொழியை தேர்ந்தெடுத்து படிப்பது என்பது எங்கள் விருப்பம் அதே நேரத்தில் நீங்கள் என்னை தமிழ் கற்றுக் கொள் என திணிப்பதற்கு திணிப்புதானே. வெளிநாட்டில் சென்று பிரெஞ்சு மொழியை படித்தே ஆகவேண்டும் என்றால் எப்படி படிக்கமுடியும். ’’ என தெரிவித்தார்.

அதே நேரத்தில் வேறொரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்இந்தி திணிப்பு பற்றி கூறும்போது இந்தி என்பது கட்டாயம் தேவை என அவர் பேசியுள்ளார். இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Next Post

இறுதி சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்…!!

Wed Nov 9 , 2022
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

You May Like