சர்வதேச அரங்கில் இந்திய கால்பந்து அணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கால்பந்து போட்டிகளுக்கு பியற்சியாளர் வீரர்களி தேர்வு செய்யும் முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரேசியா நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டிமாக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபட்டறது, இந்த போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியின் வீரர்களை ஜோதிடர் ஒருவரோடு ஆலோசித்து பயிற்சியாளர் தேர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீரர்களை தேர்வு செய்ததற்காக ஜோதிடருக்கு ரூ. 16 லட்சத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பு கொடுத்தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு போட்டிகளுக்கு முன்பாகவும் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை ஜோதிடருக்கு அனுப்பி வைத்து அவர்கள் பரிந்துரைக்கும் வீரர்களை மட்டும் ஆடும் XI-இல் பயிற்சியாளர் களமிறக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம். மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். இதற்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலவேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த இகோர் ஸ்டிமாக், இந்திய கால்பந்து னையின் வளர்ச்சிக்காக போராடும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மக்களே தீர்ப்பு எழுதுவார்கள் என்று கூறினார்.
இந்திய கால்பந்து அணியினர் ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் தாய்லாந்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசிய கோப்பை போட்டி 2024 மாம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கு விளையாடும் பொருட்டு இந்திய கால்பந்து அணி வரும் 16ஆம் தேதி சீனாவிற்கு செல்ல உள்ளது.
அதே நேரத்தில் ஐஎஸ்எல் தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ளதால், வீரர்கள் பயிற்சி முகாம்களுக்கு செல்லாமல், நேரடியாக ஆசியா கோப்பை தொடரில் களமிறங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்க்கும் கிளப் அணிகளின் நிர்வாகிகளுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருவைத்து குறிப்பிடத்தக்கது.