fbpx

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை..!! இதுதான் சரியான நேரம்..!! மக்களே உடனே முந்துங்க..!!

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது. பின்னர், பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.08 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.01 குறைந்து ரூ.5,520க்கு விற்பனையானது. இன்றைய (செப்டம்பர் 26) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,505ஆக விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை ஒரு ரூபாய் 40 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.77.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

”என்னது சின்ன வீடா”..? ”இந்த முறை 2 டைட்டில் வின்னரா”..? ஜிபி முத்து பாணியில் வெளியான பிக்பாஸ் அப்டேட்..!!

Tue Sep 26 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 7-ஆவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் விவரமும் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இந்தமுறை 2 வீடு எனவும், 2 பிக்பாஸ் எனவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. […]

You May Like