பிரபல சமையல் கலைஞராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், பல சினிமா சார்ந்த நபர்களின் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் செய்யும் முக்கிய நபராக இருக்கிறார். மேலும், இவர் மெஹந்தி சர்க்கஸ் என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் குறித்து முக்கிய செய்தி ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் தன்னுடைய ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்சல்டா உடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜாய் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் உள்ளது. ஜாய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜாய் ரங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளதோடு, R என்கிற இனிஷியல் அணிந்த டாலரை கழுத்தில் அணிந்துள்ளார். அதே போல் ரங்கராஜ் காதலர் தினத்தில் தன்னோடு இருந்ததாகவும், அவர் சூரிய காந்தி மலரை பரிசளித்ததாகவும் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
மேலும் ரங்கராஜியுடன் எடுத்து கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் ரங்கராஜ், ஜாய்யை திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இந்த ஜாய் கிரிசில்டா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இவருடன் சேர்ந்து சுற்றும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருவதால், இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
Read more : இனி டிராபிக்கிற்கு ‘குட்பை’.. பறக்கும் காருக்கு புக்கிங் குவிந்தது..!! வைரல் வீடியோ உள்ளே..