fbpx

குக் வித் கோமாளி பைனல் முடிந்தது..!! வின்னர் இந்த பிரபலம் தானாம்..!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

குக் வித் கோமாளியின் 5-வது சீசன் பைனல் முடிந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் 5-வது சீசன் தொடங்கியதில் இருந்தே பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது. முதலில் தயாரிப்பு குழு விலகியது. இதையடுத்து, முக்கிய நடுவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். செஃப் தாமு தானும் செல்ல இருப்பதாக அறிவித்த சில மணிநேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டார்.

இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடங்கிய நிகழ்ச்சி, சில வாரங்களிலேயே நிகழ்ச்சி போர் அடிக்க தொடங்கியது. தேவையேயில்லாமல் அக்காடா தம்பிடா டயலாக்குகள், காதல் டிராக் என சின்ன பிக்பாஸாகவே நிகழ்ச்சியை மாற்றினர். ஒருகட்டத்தில் ரசிகர்கள் முகம் சுழிக்கும் வார்த்தைகள் எல்லாம் பேச தொடங்கினர். இப்படி இருந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்க தற்போது ஆங்கராக இருந்த மணிமேகலை பாதியிலேயே வெளியேறினார்.

என்னுடைய சுயமரியாதை தான் முக்கியம். குக்காக வந்துள்ள ஆங்கர் என் வேலையில் நிறைய தலையீடு செய்கிறார். சொல்லி பாத்துவிட்டேன். ஆனால், அவர் கேட்கவில்லை எனக்கூறியிருந்தார் மணிமேகலை. இந்நிலையில் குக் வித் கோமாளியில் பைனல் நடந்து முடிந்துவிட்டதாம். அதில் பிரச்சனைக்கு காரண கர்த்தாவான பிரியங்கா வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் எப்படி இருந்த நிகழ்ச்சியை இப்படி அடக்குமுறை மற்றும் நெகட்டிவிட்டி என அசிங்கப்படுத்திட்டீங்களே என வெதும்பிக்கொண்டு இருக்கின்றனர்.

Read More : ’என் கணவர் அடிக்கடி இதை சொல்வார்’..!! ’என் கண்ணு முன்னாடியே’..!! உருகிய நடிகை மீனா..!!

English Summary

After the finale of the 5th season of Cook with Komali, the winner has been announced.

Chella

Next Post

ரஜினியின் படத்தை முந்தியதா கோட் திரைப்படம்..? இதுவரை எத்தனை கோடி வசூல்..?

Mon Sep 16 , 2024
Code film is close to 400 crore collection. Therefore, in a few weeks, it is possible that the Jailer Collection Code film will also be released.

You May Like