fbpx

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய விலை..! சமையல் எரிவாயு விலை குறைப்பு..! பொதுமக்கள் மகிழ்ச்சி…

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அனைத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எரிவாயு உருள விலையில் ரூ.400 குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு பெண்களுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பரிசு இது என தெரிவித்த அவர், கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்க முடிவு செய்யப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சமையல் எரிவாயு உருளை விலையில் ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் ரூ.1118.50 க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில், ரூ.1,103 ஆக உள்ள சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.903-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப விலை சிறிது வேறுபடும். இந்த விலை குறைப்பு காரணமாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Kathir

Next Post

"சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்..!" ராகுல் கூறியது உண்மை..! பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய சிவசேனா எம்.பி!

Wed Aug 30 , 2023
அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த பிரதமர் மோடிக்குத் தைரியம் இருக்கிறதா என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என சீனா கூறிவருகிறது. அப்பகுதியை தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதற்கு இந்தியா தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது சீனா சர்ச்சைக்குரிய வகையில் […]

You May Like