fbpx

குழாய் உடைந்ததால் ரோட்டில் குளம் போல் தேங்கிய சமையல் எண்ணெய்: நாச வேலை காரணமா..?!

சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து திருவொற்றியூர் அருகேயுள்ள திருச்சினாகுப்பம் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு, சமையல் எண்ணெய் குழாய்களின் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட விரிசலால், காசிமேடு பகுதியில் மீனவர்கள் படகு நிறுத்துமிடத்தில் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கியுள்ளது.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும்  பாமாயில் எண்ணெய், திருச்சினாகுப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்படுவது வழக்கம்.

குழாய்களின் மூலம் பெறப்படும் எண்ணெய் அங்கு சுத்திகரிக்கப்பட்டு, பாக்கெட்டுகள் மற்றும் டின்களில் அடைக்கப்படுகிறது. இதன் பின்னர் அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், எண்ணூர் நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் நேற்று பிற்பகல் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் கசிந்ததால், அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று காசிமேடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rupa

Next Post

மக்களே கவனம்.. இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Tue Sep 27 , 2022
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர், ராணிப்பேட்டை, […]
மக்களே உஷார்..!! அதி கனமழை..!! 3 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

You May Like