விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் புதிதாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்க்கில் விஷ்ணு சரியாக விளையாடி வெற்றி பெறுகிறார். அடுத்ததாக கூல் சுரேஷ் விளையாடுகிறார்.
ஆனால், கூல் சுரேஷ் தோற்று விட்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். இதனால், அனைவரும் சேர்ந்து அக்ஷயாவை ஜெயிலுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனைப் பார்த்த பிரதீப் நீங்க யாரும் இந்த வாரம் தப்பு பண்ணலையா என்று கேட்கின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.