fbpx

அண்ணாமலையை பங்கம் செய்த கூல் சுரேஷ்..!! தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு படத்திற்கு ப்ரோமோஷன்..!!

நடிகர் கூல் சுரேஷ் சில படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர். அவர் நடித்து பிரபலம் ஆனதை விட தியேட்டர் வாசலில் ‘வெந்து தணிந்தது காடு.. வணக்கத்தை போடு’ என யூடியூபர்கள் மத்தியில் வித்தியாசமாக பேசி பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

அவ்வப்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் செய்யும் சில விஷயங்களும் இணையத்தில் வைரலாகும். GOAT படத்திற்கு ஆட்டுக்குட்டி தூக்கி கொண்டு செல்வது, ஹெலிகாப்டரில் வருகிறேன் என சொல்லி பொம்மை ஹெலிகாப்டருடன் தியேட்டருக்கு வருவது என அவர் பல விதமான விஷயங்களை செய்திருக்கிறார்.

இந்நிலையில், கூல் சுரேஷ் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஒரு படத்திற்கு ப்ரோமோஷன் செய்திருக்கிறார். அதாவது, திரு.மாணிக்கம் என்ற படத்திற்காக தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். அடித்துக் கொள்ளும்போது படத்தின் பெயர், தயாரிப்பாளர் லிங்குசாமி பெயர் ஆகியவற்றை கூறி அவர் அடித்துக்கொண்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று திமுக அரசை கண்டித்து கோவையில் தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதை பின்பற்றி கூல் சுரேஷ் இப்படி சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கிறார்.

Read More : 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்..!! எந்த மாதத்தில் அதிக லீவு வருது தெரியுமா..?

English Summary

Cool Suresh has promoted a film by whipping himself.

Chella

Next Post

மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோற்றால் என்ன நடக்கும்? WTC இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியுமா..?

Sat Dec 28 , 2024
How can India qualify for WTC final 2025 if they lose/draw Melbourne Test vs Australia? Qualification scenarios explained

You May Like