ஜெய்பூரில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றார்..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர். இவரது 20 வயது மகள் ரக்சயா . கல்லூரிப்படிப்பை முடித்துள்ள நிலையில் சிறு வயதில் இருந்தே அழகிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் பகுதி நேர வேலையை செய்து அழகிப்போட்டிக்கு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு மோனோ ஆக்டிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றதை அடுத்து அவர் கவுரவிக்கப்பட்டார். பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஃபார்எவர் ஸ்டார் இந்தியன் அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மாநில அளவிலான போட்டி ஜெய்பூரில் 18 ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்தியா முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் ரக்சாய இந்த போட்டியில் பங்கேற்றார். நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ரக்சயா சாதனைபடைத்துள்ளார். மேலும் ’’மிஸ் தமிழ்நாடு’’ பட்டத்தையும் ரக்சயாதட்டிச் சென்றார். நடைபெற்ற போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அழகிகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இறுதிப் போட்டிக்கு தேர்வாகியவர்களுக்கு அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்படும் பின்னர் அதில் தேர்வாகும் ஒருவருக்கு ’’ மிஸ் இந்தியா’’ பட்டம வழங்கப்படும்.