தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் 38,038 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனாவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 459 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 35,28, 941 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,945 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றார்கள் .

சென்னை நிலவரம்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.