fbpx

மீண்டும் உயிர் பலி வாங்கத் தொடங்கிய கொரோனா..!! திருச்சி இளைஞர் பலி..!! பொதுமக்கள் பீதி..!!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்திருந்தது. இருப்பினும், உருமாறி வரும் ஒமைக்ரான் வகை தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும், மக்கள் எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில், தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூருவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சுற்றுலா செல்வதற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோவா சென்றுள்ளார். 2 நாட்கள் அங்கேயே தங்கி கோவாவை சுற்றி பார்த்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய அந்த இளைஞருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். மேலும், நேற்று இரவு கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லை. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"வாவ்........ சூப்பர்"!கேலக்ஸி இணையும் காணக் கிடைக்காத புகைப்படங்களின் தொகுப்பு! பொது மக்களின் பார்வைக்காக முதல் முறை காஸ்மாஸ் வெப்!

Sun Mar 12 , 2023
காஸ்மாஸ் வெப் என்ற விண்வெளி ஆய்வினை பற்றிய இணையதளம் ஒன்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகளின் சான்று படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மிகப்பெரிய திட்டமான காஸ்மாஸ் வெப்பிலிருந்து புகைப்படங்கள் முதல் முதலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கே மிகவும் அதிசயமூட்டும் வகையில் நாம் தூரத்திலிருந்து […]

You May Like