சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மளமளவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் தற்போது வரை சுமார் 56,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூரில் இன்று முதல் கொரோனா பாதிப்பு விவரங்கள் அன்றாடம் வெளியிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவும் வேகத்தால் அந்நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் மலேசியா அரசு உடனடியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட மாட்டாது. முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது.