கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது.
சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , மால்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மங்கோலியா மாகாணத்திலும் புதிய பயணிகள் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது . எனவே சீனா உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
உலகில் அதிவேகமாக பரவக்குடிய கொரோனா நோய்கள் தாக்கம் இருக்கும் பகுதிகளில் சீனாவும் அடங்கியுள்ளது. எனவே அதைத் தடுக்கும்பணிகளில் சீன சுகாதாரப் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். . யாரும் அவர்களின் மாகாணங்களை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவித்துள்ளது. 600 ,500 என கொரோனா இருந்த நிலையில்தற்போது அதிகரித்து வருவது கவலையடையச் செய்கின்றது.