இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா அளவை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இவ்வாறு பாதிப்பும் உயிரிழப்பும் இருந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுக்குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கடிதத்தில், தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பதிப்பில் 6.3 % தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளது.
கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு உடனடியாக அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.