fbpx

கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!! மருத்துவமனைகளில் குவியும் மக்கள்..!!

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களில் 90% பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ’சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகின்றன.

பெரும்பாலான பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. மாறாக கொரோனா தொற்றே உறுதி செய்யப்படுகிறது. வளிமண்டல மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால், கொரோனா தொற்றின் அறிகுறிகள் தீவிரமடைந்து வருவதைக் காண முடிகிறது’ என்று அம்மாநில மருத்துவர் சன்னி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான ஆபாச படங்கள்.! ஹேக்கர்களின் கைவரிசை.! நடந்தது என்ன.?

Wed Dec 13 , 2023
தமிழ் சினிமாவின் வெற்றியை இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கைதி மாஸ்டர் விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களின் வெற்றியாள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தையும் சன் நியூஸ் […]

You May Like